ஐ.எஸ். மீது உச்சகட்ட தாக்குதல்: அமெரிக்கா அதிரடி திட்டம் - Sri Lanka Muslim

ஐ.எஸ். மீது உச்சகட்ட தாக்குதல்: அமெரிக்கா அதிரடி திட்டம்

Contributors
author image

World News Editorial Team

IS சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

 

இந்த சூழ்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் பேராதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். மீது உச்சகட்ட தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வரும் புதன்கிழமை விரிவான விளக்கம் அளிக்கவும் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்தெந்த நாடுகளில் எல்லாம் தீவிரவாதக் குழுக்கள் உள்ளனவோ, அந்நாடுகளை ஆக்க்கிரமித்து விடலாம் என்று அமெரிக்கா எண்ணவில்லை. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் அரசுக்கு துணையாக நிற்பது நமக்கு முன் இருக்கும் மிகப்பெரிய கடமையாக பார்க்க வேண்டியுள்ளது.

 

வரும் மாதங்களில் ஐ.எஸ். ஆதிக்கத்தை முறியடித்து, முனை மழுங்கிப் போகச் செய்வதுடன், அவர்களின் பலத்தை குறைத்து, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்போம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team