ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி, இரண்டாவது - Sri Lanka Muslim

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி, இரண்டாவது

Contributors

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி, இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.

இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் “நம்பர்-2′ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 131 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி (116 புள்ளி) உள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் புஜாரா 6வது இடத்தில் உள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் விராத் கோஹ்லி 20வது இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் 5வது, பிரக்யான் ஓஜா 9வது இடத்தில் உள்ளனர். “ஆல்-ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் “நம்பர்-1′ இடத்தில் தொடர்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team