ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் அஸ்வின் - Sri Lanka Muslim

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் அஸ்வின்

Contributors

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

தரவரிசைப்படி துடுப்பாட்ட வரிசையில் தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய வீரர்கள் புஜாரா ஆறாமிடத்திலும், விராட் கோஹ்லி 20–வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஸ்டெயின் முதல் இடத்தில் தொடருகிறார்.

இந்திய வீரர்கள் அஸ்வின் ஐந்தாமிடத்திலும், பிரக்யான் ஓஜா ஒன்பதாமிடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர்கான் 20–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team