ஐ.தே.க, ஜே.வி.பி. எம்.பிக்கள் பகிஷ்கரிப்பு: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு - Sri Lanka Muslim

ஐ.தே.க, ஜே.வி.பி. எம்.பிக்கள் பகிஷ்கரிப்பு: தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கேற்பு

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. எம்.பிக்கள் சபைக்குள் இருக்கவில்லை.

வரவு- செலவுத் திட்டத்தை பகிஷ்கரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் 7 பேர் மட்டும் சபையில் அமர்ந்திருந்தனர்.

2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட ஆலோசனைகளின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே ஐ.தே.க, ஜே. வி.பி எம்.பிக்கள் சபைக்குள் சமுகம் தராதிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team