ஐ.தே.க. தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!- ஐதேக CHOGM ல் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானம் - Sri Lanka Muslim

ஐ.தே.க. தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!- ஐதேக CHOGM ல் கலந்து கொள்ளாமல் இருக்க தீர்மானம்

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு எதிரில் பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்வதாகவும், சர்வதேச ஊடகவியலாளர்களை கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தியே அந்த அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக கட்சியின் தலைமையகத்திற்குள் இருப்போர் வெளியில் வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறிகொத்தவிற்கு எதிரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமை மாநாட்டின் ஆரம்ப கூட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் இன்றும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சிறிகொத்த கட்சி அலுவலகத்தை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் சிறிகொத்த முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் நடைபெறும் கொமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் திஸ்ஸ அதனாயக்க தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team