ஒன்பதாவது பௌர்ணமி வகவ கவியரங்கு - Sri Lanka Muslim
Contributors
author image

N.Najmul Hussain

எதிர்வரும் 08-09-2014 (திங்கட் கிழமை) பௌர்ணமி அன்று காலை 10 மணிக்கு கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கு கவிஞர் வதிரி சீ. ரவீந்திரன் தலைமையில் இடம்பெறும்.

 

இக் கவியரங்கில் கவிதை பாட விரும்பும் கவிஞர்கள் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் கையடக்கத் தொலைபேசி இல.0777 388149 அல்லது 0714 929642 க்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரினைஅறிவிக்கவும். கவிதை நான்கு நிமிடத்திற்கு உட்பட்டதாக இருப்பது விரும்பத்தக்கது.
 
நவமணி பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரத் தலைவருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன்  பிரதம அதிதியாக கலந்து கருத்துரை வழங்குவார்.

 

கவிதா ரசிகர்களும், கவிதை வாசிக்க விரும்புவோரும் கலந்து சிறப்பிக்குமாறு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஸ்தாபக உறுப்பினர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர் கனி மேற்கொண்டு வருகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team