ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஆப்கானை விட்டு வெளியேறுவோம்!-அமெரிக்கா மிரட்டல்! - Sri Lanka Muslim

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் ஆப்கானை விட்டு வெளியேறுவோம்!-அமெரிக்கா மிரட்டல்!

Contributors

வாஷிங்டன்:“பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கன் கையெழுத்திட மறுத்தால்அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும்.ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக, அந்த நாட்டின் 2014 தேர்தல் வரைகாத்திருக்க முடியாது” என்று ஆப்கன் அதிபர் ஹமீத்  கர்சாய்க்குஅமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கன் பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், காபூலில்ஹமீத் கர்ஸாயிடம் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக, வெள்ளை மாளிகைவிடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா தயாராகஉள்ளதாகவும், அதில் ஆப்கனும் கையெழுத்திட வேண்டும் என்றும் ஹமீத்கர்சாயிடம், சூசன் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ள அதிபர் கர்சாய், இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் நிலையில் இல்லை.2014ல் ஆப்கனில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க மற்றும் நேட்டோபடைகளுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்குதில் உள்ள பிரச்னையே, ஹமீத்கர்சாயின் மறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.கர்சாய் கையெழுத்திட வில்லையெனில், ஆப்கனுக்கு உதவிகள் வழங்குவதுகுறித்து நேட்டோ மற்றும் பிற நாடுகள் அளித்த உறுதிமொழிகள் பாதிக்கப்படும்என்றும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team