ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் வீராட் கோஹ்லி - Sri Lanka Muslim

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் வீராட் கோஹ்லி

Contributors

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களுக்கு மேல் இரண்டு முறை எடுத்த போதும், இந்தியா சேசிங் செய்து வெற்றி பெற்றது.

இந்த இரண்டு போட்டியிலும் வீராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். அதோடு மட்டுமல்லாமல் 5 போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 344 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சராசரி 114.66 ஆகும்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஒரு கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த கோஹ்லி, முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அம்லா இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

பந்து வீச்சில் முதல் இடத்தில் இருந்து ரவிந்திர ஜடேஜா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டள்ளார். பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team