ஒரு இலட்சத்துக்கு அதிக மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் - பந்துல..! - Sri Lanka Muslim

ஒரு இலட்சத்துக்கு அதிக மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் – பந்துல..!

Contributors

ஒரு இலட்சத்துக்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவரிடமிருந்தும் 5 வீதம் வரி அறவிடப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுச் சேவைகளை நடத்திச் செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என பந்துல தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்துக்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத் துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு எனக் கூறி நூற்றுக்கு 5 வீத வரி விதிக்க வேண்டும்.

வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு இலட்சத்திற்கு மேல் மாத வருமானமுள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team