ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் பெண் கைது - Sri Lanka Muslim

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் பெண் கைது

Contributors

செ.தேன்மொழி

ஹோமாகம – கோனபொல பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஹோமாகம – கோனபொல பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 268 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 57 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப் பொருள் கடத்தல் காரரான ரஜகல்கொடகே சுகத் குமார என்ற சந்தேக நபருக்கு சொந்தமான போதைப் பொருட்களை கடத்துவதற்கு நீண்ட காலமாக குறித்த பெண் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த பெண்ணை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team