ஒரு பெண்ணிடம் தன் ஆண்மையை நிருபிக்க தமிழ் முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தி வரலாற்றுத்தவறினை செய்த மனோ..! - Sri Lanka Muslim

ஒரு பெண்ணிடம் தன் ஆண்மையை நிருபிக்க தமிழ் முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தி வரலாற்றுத்தவறினை செய்த மனோ..!

Contributors

Club house எனப்படும் அரட்டை அடிக்கும் செயலியினூடாக இடம்பெற்ற அரட்டையடிக்கும் நிகழ்சி்யில் பெண் ஒருவர் உங்களுக்கு ஆண்மையிருந்தால் பாதிக்கப்பட சிறுமியின் பிரச்சனையில் தலையிடுங்கள் என்று கூறியதே இன்று எழுந்துள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம்.

மனோகணேசனுக்கும் ரிசாட் பதூதீன் அவர்களுக்கும் அரசியலில் பல கொடுக்கல் வாங்கல்கள் இருந்தது என்பது பலருக்கும் தெரிந்தும் தெரியாததுமான விடயமாகும். அந்த வகையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் தன்னுடைய வேட்பளர்களை களமிறக்க தேவையான வேலைத்திட்டங்களை தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனால் தேர்தல் நெருங்கியவுடன் ரிசாட் பதூதீனுடன் இடம்பெற்ற பேரம்பேசல் நடவடிக்கையின் காரணமாக தேர்தலில் தன்னுடைய வேட்பாளர்களை பின்வாங்கிக்கொண்டார் மனோ கணேசன்.

இவ்வாறு பல்வேறு கொடுக்கல் வாங்கல்களில் ரிசாட் பதூதீனுடன் தொடர்புபட்ட மனோ கணேசன். ஹிஷாலினியின் மரணத்தின் நிகழ்வின் ஆரம்பத்தில் அமைதியாக வழமைபோல் வீட்டுக்குள் முடங்கி இருந்துவிட்டார். இந்த காலப்பகுதியில் Club House எனப்படும் செயலியில் அரட்டை அடிக்கும் நிகழ்வில் பங்குபற்றிய மனோகணேசன் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் பெண் “ உங்கள் இனப்பெண் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது நீங்கள் ஆண்மை உள்ளவர் என்றால் முதலில் அந்த பிரச்சனையை பார்த்துவிட்டு இங்குவந்து பேசுங்கள் என்று கூறினார்.

மனோகணேசன் பொதுவாக பெண்கள் இவ்வாறு கூறிவிட்டால் ஹீரோசிசம் காட்ட ஆரம்பித்துவிடுவார். இது அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியும். அவருடைய பிரத்தியேக செயலாளராக செயற்படும் பிரியாணி என்ற பெண்ணுக்காக பலரை அவர் தனது கட்சியில் இருந்து தூக்கி எறிந்ததும். அமைச்சராக இருக்கும் போது பல் வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதையும் பலர் அறிவார். அது போல் ஒரு யாழ்ப்பாண பெண்ணினை கவர்வதற்காக யாழ்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த இளைஞனுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார் என்பது பற்றியும் பல தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெண்கள் விடயத்தில் தனது வயதிற்கு மீறிய ஹீரோசிசம் காட்டும் மனோகணேசன் இந்த club house இல் தன்னுடன் அரட்டையடித்த பெண்ணின் கோரிக்கைக்காக அடுத்த நாள் காலையிலேயே பொரளை பொலிஸ்ஸுக்கு தலதாஅத்துக்கோரளை மற்றும் நுவரேலிய மாவட்ட MP உதயா அவர்களுடன் சென்றுள்ளார். அந்த பொலிஸ் OIC, இந்த பிரச்சனையில் அரசியல் தேவையில்லை நாங்கள் உரிய விசாரணையை செய்துகொண்டுவருகிறோம். இந்த விடயத்தில் இரண்டு தரப்பில் இருந்தும் எந்தவிதமான அழுத்தங்களையும் நாம் விரும்பவில்லை என சற்று காரசாரமாக மனோவிடம் அந்த OIC கூறியுள்ளார்.

தன்னுடைய ஹீரோசத்திற்கு இந்த OIC இடம்கொடுக்கவில்லையே என கோபம் அடைந்த மனோகணேசன் தன்னுடைய கட்சியில் இருந்த மேலும் ஐந்துபேரை அழைத்துக்கொண்டு IGP தென்னக்கோன் அவர்களிடம் ஓடிச்சென்று பொரளை பொலிஸ் OIC இடமாற்றம் செய்யவேண்டும் என கத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தென்னக்கோன் அவர்கள் இந்த விடயத்தில் யாரும் எமக்கும் பாடம் எடுக்கவோ அல்லது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவோ தேவையில்லை என் கடுமையான தொனியில் கூறியுள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று தவிர்த மனோகணேசன் இந்த பிரச்சனையின் விசாரணைகள் ஆரம்ப கட்டங்களில் இருக்கும் தருணத்திலேயே பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை பேசியுள்ளார். அந்த தருணத்தில் இருந்தே இந்த பிரச்சனை அரசியல் மயமாக்கப்படுள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் மும்மராமாக இடம்பெற்றுகொண்டிருக்கும் போது அதன் போக்கை திசைதிருப்பும் நோக்குடன் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் இதனை பேசியதை இன்று அவரின் அடிவருடிகள் பலர் அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான பிரச்சானையாக மாற்றியுள்ளார்கள். இதன் உச்சக்கட்டமாக அரசியலில் எந்த தொடர்பும் அற்ற ரிசாட் பதூதீனின் மனைவியையும் இந்த பிரச்சனையில் சிக்கவைத்து கைதாக்கி சிறையில் அடைத்து பழிக்கு பழி வாங்கியதாக தன்னுடைய சகாக்களுடன் கதைத்ததாக கூறப்படுகின்றது.

மனோவுடன் அரட்டையடித்த பெண்ணுக்காக அவர் செய்த வேலை இன்று இரண்டு இனங்களின் இளைஞர்களுக்கு இடையில் அனாவசியமான வாதங்களையும் இனவதாத செயற்படுகளையும் சமூக வலைத்தளங்களில் உருவாக்கியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team