ஒரு மணித்தியாலத்தில் அமைச்சு, பதவியைத் துறக்கத் தயார் - அமைச்சர் பந்துல..! - Sri Lanka Muslim

ஒரு மணித்தியாலத்தில் அமைச்சு, பதவியைத் துறக்கத் தயார் – அமைச்சர் பந்துல..!

Contributors

சதொச உட்பட சுப்பர் மார்க்கட்டுகளில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகைப் பொதிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ஒரு மணி நேரத்தில் துறப்பதாக நாடாளுமன்றில் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பரிமாற்றங்கள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதியொன்று ச.தொ.ச உட்பட சுப்பர் மார்க்கட்டுகளில் பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் இந்த பொதியில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team