ஒரு மணிநேரத்தில் மூன்று பேர் வீதம் மரணம்? இலங்கை கொரோனா ஆபத்தான கட்டத்தில்..! - Sri Lanka Muslim

ஒரு மணிநேரத்தில் மூன்று பேர் வீதம் மரணம்? இலங்கை கொரோனா ஆபத்தான கட்டத்தில்..!

Contributors

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது என சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் மூலம் டெல்டா வைரஸின் தாக்கத்தை உணர முடிவதாகவும் சிறிது காலமேனும் பயணத்தடை அமுல்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team