ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது..! - Sri Lanka Muslim

ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது..!

Contributors
author image

Editorial Team

ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. அதிக கொள்கலன்களுடன் பயணித்த எவர்கிவன் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சுயெஸ் கால்வாயில் பயணித்த போது தரைதட்டியிருந்தது.

அங்கு வீசிய புயல் காரணமாக குறித்த கப்பலின் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால் சுயேஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பல நாடுகளுக்கு சொந்தமான 320 கப்பல்கள் தமது போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அது விரிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, சுயெஸ் கால்வாயில் தரைதட்டியிருந்த கப்பல் முழுமையாக மீட்கப்பட்டு, அங்கு கப்பல் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team