"'ஒரே நாடு,ஒரே சட்டம்' குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது" - அதாவுல்லா! - Sri Lanka Muslim

“‘ஒரே நாடு,ஒரே சட்டம்’ குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது” – அதாவுல்லா!

Contributors

“ஒரே நாடு, ஒரே சட்டம்” குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“அதற்கான தேவையோ, அவசியமோ இப்போது கிடையாது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகியமையை அடுத்து, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியும் செயலிழந்துவிட்டது.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பாக அவர்களுடன் நேருக்கு நேர் மிக கடுமையாக முரண்பட்டு கொண்டு வெளியேறியவன் நான் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகின்றேன்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்று நீங்கள் சொல்வது என்ன? என்று பல நூற்று கணக்கானோர் திரண்டிருந்த உயரிய சபையில் வைத்து கோட்டாபயவை நான் வினவினேன்.

அவர் பதவி விலகியமையுடன் அதை பற்றி பேசுவது கோமாளித்தனமாக தெரிகின்றது. அது அர்த்தமற்றது” என்றார்.

 

நூறுல் ஹுதா உமர்

Web Design by Srilanka Muslims Web Team