ஒரே நாளில் 925 பேர் கைது - Sri Lanka Muslim
Contributors

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்புக்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் 925 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கு அமைய, நேற்று முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்டவர்களிடையே, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306 பேரும், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 518 சந்தேகநபர்களும் கைது காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் தினங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team