'ஒழுக்கமே வெற்றிக்கான வழி' -இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா - Sri Lanka Muslim

‘ஒழுக்கமே வெற்றிக்கான வழி’ – -இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

Contributors

எல்லைகளை தகர்த்து மாற்றங்களை உருவாக்குவோம்’ என்ற எண்ணகருவை மையமாக கொண்டு (16 ஆம் திகதி) இடம்பெற்ற 35 ஆவது சர்வதேச பட்டய கணக்காளர் மாநாட்டில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தளபதிக்கு கௌரவமளிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் 100 இற்கும் அதிகமான பட்டய கணக்காளர்கள் மற்றும் பட்டய கணக்கு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தெற்காசிய பட்டைய கணக்காளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட உலக நாடுகளிலுள்ள 1000 க்கும் மேற்பட்டவர்கள் இணைய வழி தொழில்நுட்பத்தின் வாயிலாக இணைந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்கள் ஒழுக்கமான எதிர்காலத்துக்கு தயாரா என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக பிரதம விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கையின் பட்டய கணக்காளர் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 35 வது சர்வதேச பட்டய கணக்காளர் மாணவர் மாநாடு, கொழும்பு 7 இல் உள்ள இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் திரு தனுஷ்க சதுரங்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மங்கள விளக்குகள் ஏற்றி இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாணவர்கள் தங்கள் புதிய வலைத்தளத்தையும், மாணவர்களின் ‘ப்யூஷன்’ இதழின் 17 வது பதிப்பு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், பட்டய கணக்காளர் மாணவர் சங்கத்தின் தலைவரின் ஆரம்ப உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக நம்பிக்கையூட்டும் வகையில் உரை நிகழ்த்திய ஜெனரல் ஷவேந்திர சில்வா, ‘நவீன சமுதாயத்தின் இளம் தலைமுறையினரை தொழில் ரீதியாக ஒழுக்கமாக மாறுவதற்காக வழி’, ‘தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியான முறையில் முகாமைத்துவம் செய்துகொள்ளல்’ என்பன தொடர்பில் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினரின் உரையின் நிறைவில், பட்டய கணக்காளர்கள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.தனுஷ்க சதுரங்காவினால் தளபதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஆரம்ப விழாவில் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் திரு மணில் ஜெயசிங்க, விரிவுரையாளர், பட்டய கணக்காளர் மாணவர் சங்கத்தின் திரு ரியாஸ் மிஹ்லார் மற்றும் ஏனைய சிலர் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சிறப்புரை கீழ்வருமாறு ‘இன்றைய பேச்சுக்கான எண்ணக்கரு என்னை மற்றுமொரு பரிணாமத்துக்கு கொண்டு சென்றது. அதனால் எனது உரையின் உள்ளீடுகளை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறேன். முதலில், நான் சுய ஒழுக்கத்தின் அம்சத்தைப் பற்றி பேசுவேன், பின்னர் நான் தொழில்முறை ஒழுக்கத்தைப் பற்றி பேசுவேன், தொழில்முறை வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை எவ்வாறு அடைவது என்பது குறித்து நான் எடுத்துரைப்பேன்’.

‘சுய ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும்போது, நம்மிடமிருந்து கேட்கப்பட வேண்டிய முதல் மற்றும் முக்கிய கேள்வி என்னவென்றால்,’ நீங்கள் சுய ஒழுக்கமுள்ளவரா என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? உங்களை பற்றி நீங்களே சரியான தீர்மானங்களை எடுக்க முடியுமேதவிர வேறு யாருமல்ல. இந்த நேரத்தில் எது சரியானது மற்றும் மிகவும் எளிதானது என்பதற்கு இடையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு உங்களுக்கு கிடைத்திருக்கும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு நீங்கள் எப்போதாகவது செயற்பட்டுள்ளீர்களா? ‘நான் எப்போதும் தனிப்பட்ட தேவைகளுக்கு மேலதிகமாக சரியானதைத் தேர்ந்தெடுத்தேன்’ என பலரும் கூறுவர். ‘ஆனால் அது உண்மையா? அது உண்மையாக இருந்தால், நீர் மாசுபடுவதையும், காற்று சாம்பல் நிறமாகவும், ஆறுகள் கறுப்பாகவும், வனப்பகுதி குறைந்து வருவதாகவும், சிறைச்சாலைகள் குற்றவாளிகளால் நிரப்பப்படுவதையும் நாம் ஏன் பார்க்கிறோம்?, எனவே இப்போது நீங்களே பேசுங்கள், நீங்கள் யாராலும் கவனிக்கப்படாதபோது நீங்கள் அதே தேர்வு செய்கிறீர்களா என்று கேளுங்கள். அதற்கான பதிலை நீங்களே காணலாம் ‘.

‘ஆகையால், சுய ஒழுக்கம் தான் ஒரு நபரின் நடத்தை என்று எடுத்துரைக்க விரும்புகிறேன். அது வேறொருவரால் கவனிக்கப்படாமலோ அல்லது கட்டுப்படுத்தப்படாமலோ இருக்கும்போது நெறிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒழுக்கத்தின் பொருளை நன்றாக புரிந்து கொள்ள, இராணுவத்தின் ஒழுக்கம் பற்றி சில வார்த்தைகளை பேசுகிறேன். ‘

‘இராணுவத்தில், ஒழுக்கம் என்பது ஒரு சிப்பாயின் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. இராணுவத்தில் சேர்ந்தபின் ஒரு குடிமகன் கண்ணிவெடிகளை நோக்கி அணிவகுக்கவோ அல்லது எதிரியின் இயந்திர துப்பாக்கி அல்லது தாங்கியை எதிர்கொள்ளவோ, அவன் ஆபத்தில் இருப்பதை அறிந்தால் எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதனை ஒழுக்கம் என்பதை விட வேறு விதமாக கூற முடியாது. சுயநலத்தை விட அவர்களின் நோக்கத்தில் கவனம் செலுத்துவதற்காக அவர்கள் தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டவர்கள். அவர்கள் தங்கள் சுய ஒழுக்கத்தை ஒரு மட்டத்திற்கு

‘ஒரு குடிமகன் இராணுவத்தில் உள்வாங்கப்படும்போது, ஆரம்பத்தில் அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து வாழ்க்கையில் உண்மையான அர்த்தமுள்ள விடயங்காள் தன்னை முழுமையாக்கிக்கொள்ள வேண்டும். முறையான பயிற்சியின் மூலம் அதனை அடையலாம். இதன் விளைவாக, சுய ஒழுக்கத்தின் மூலம், ஒரு நபர் தன்னுடைய பாதையை நம்பிக்கையுடனும், உள வலிமையுடனும், சுயமரியாதையுடனும் வளர்த்துக்கொள்ள வழியேற்படும்.

‘நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காத உங்கள் அன்றாட நடைமுறைகள் தானாகவே உங்கள் பழக்கமாக மாறும். நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்த பழக்கங்கள் உங்கள் பண்புகளாக மாறுகின்றது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் ஒழுக்கத்தின் அளவை பிரதிபலிப்பாகும். ஒருவரின் ஒழுக்கம் குறைவதற்கு அவர்கள் அதிக கவனம் செலுத்தாத நடைமுறைகளே காரணமாக அமையும். எனவே, சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள, ஒருவர் தனது பலவீனங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர், பலவீனங்களை சமாளிக்கவும், சிறந்த நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் குணங்களால் வாழ்க்கையை நிரப்பவும் ஒரு சொந்த மூலோபாயத்தை உருவாக்க வேண்டும். ‘

‘தொழில்முறை ஒழுக்கம் இன்று பரவலாக பேசப்படும் விடயமாகும். நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமான நபராக இருக்கலாம். ஆனால் அந்த ஒழுக்கம் உங்கள் தொழில் வாழ்க்கையுடன் ஒன்றிக்கவில்லை என்றால், நீங்கள் விரைவில் ஒரு தலைகீழ், சுயநல மற்றும் சுய நோக்குடைய பாத்திரமாக மாறிவிடக்கூடும் அதனால், இது உங்கள் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ‘

‘நீங்கள் உங்கள் கல்வி, உங்கள் தொழில் மற்றும் உங்கள் வாழ்க்கையின் அடைவுகளை உங்கள் தொழிலுக்கு அர்ப்பணிக்கிறீர்கள். உங்கள் தொழில்முறை நிலை என்பது ஒரு தற்காலிக உரிமமாகும், அதற்கான சட்டத்திற்குள் நீங்கள் செயல்பட வேண்டும். அதேபோல் உங்கள் நற்பெயர், திறமை மற்றும் உங்கள் நேர்மை ஆகியவை உங்கள் எதிர்காலத்தின் கூறுகளாகும்., அதனால் நீங்கள் உங்கள் ஆளுமையில் தொழில் ரீதியாக ஒழுக்கமான நபராக இருக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறேன்.

‘முதலில் உங்கள் பணியிடத்திற்க்கோ வகுப்பறைக்கோ உங்கள் வருகை முக்கியமானதாகும். உங்களுடைய நிலைக்கு அப்பால் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதும் அவசியமானது. மேலும் நிறுவனத்தில் அல்லது கற்றல் பாடத்திட்டத்தில் உங்கள் பங்கைக் கையாளத் தயாராக இருக்க வேண்டும். இது உங்கள் குணத்தையும் உங்கள் பொறுப்புகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. ‘ ‘இரண்டாவதாக, ஒருபோதும் வேலையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; உங்கள் வேலையை நீங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டால், உங்கள் முன்னேற்றத்துக்கான பாதை தடைப்படுகிறது. உங்கள் தொழிலின் தேவைக்கு ஏற்ப உங்கள் முன்னுரிமைகளை வழங்க பழகிக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய நிறுவன இலக்குகளையும் உங்கள் அபிலாஷைகளையும் சீரமைக்க வேண்டும். இதை உங்களுக்குச் செய்ய முடியுமாயின், உங்கள் வெற்றியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ‘

‘மூன்றாவதாக, ஒரு தொழில்முறை நிபுணராக, நீங்கள் எப்போதும் நிறுவன கட்டமைப்பின்படி ஒழுக்கமாக உடை அணிந்து, பேச்சு மற்றும் நடத்தை மற்றும் உரையாடல்களைக் கையாளும் முறையை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டமிடல் ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டும். இதானால’ உங்கள் மீதான நம்பிக்கை உங்கள் அதிகாரிகள் மத்தியிலும் மேம்படும். ‘நான்காவது, சுய கட்டுப்பாடு; சுய கட்டுப்பாடு சுய ஒழுக்கத்திலிருந்து உருவாகிறது. சரியான பணிகளை முடித்த பின்னர் இடைவெளி எடுப்பதே சரியான விவேகமான மற்றும் ஒழுக்கமான தொழில்முறையாக அமைந்திருக்கும். ஆகவே, பணிச்சுமையை அடிக்கடி தள்ளிவைப்பதை விட, உரிய நேரத்தில் பணிகளை செய்து முடிக்க உங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம். இதுவே உங்களுடைய உண்மையான செயல்திறனாகவும், அர்ப்பணிப்பாகவும் அமையும். ‘

‘ஐந்தாவது, சரியான நேர முகாமைத்துவம் என்பது தொழில்முறைக்கான அறிகுறியாகும். மேலும் நம்பகமான பணியாளராக தனித்துவமாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது வேலையை முன்கூட்டியே முடிக்க உதவுகிறது அத்தோடு சரியான நேரத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேறவும் தனிப்பட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கிறது. ‘ ‘ஆறாவது, நீங்கள் பணியிடத்திற்கு அல்லது கற்றல் நிறுவனத்திற்கு வரும்போது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் கடமைகளை கையாள நீங்கள் தயாராக உள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அன்றாட பிரதிபலிப்பு, மீளாய்வு, திருத்தம் மற்றும் சரிசெய்தல் ஆகியவைகளை தயாரிக்கப்பட் பயனுள்ள வாழ்க்கையை செலவிட வேண்டிய நேரம் என்பன பற்றியும் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

‘ஏழாவது, திறமையானவராக இருங்கள்; எப்போதும் உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுங்கள் அதேபோல் உங்கள் தவறுகளையும் தோல்விகளையும் கற்றல் வாய்ப்புகளாக மாற்றலாம். உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகளைப் பற்றி நன்றாக உணருங்கள். ஆனால் ‘உங்கள் பரிசுகளில் மட்டும் தங்கியிருக்காதீர்கள்.’ உங்கள் தொழில்முறை திறன்களில் நம்பிக்கையையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளும்போது, எப்போதும் உங்கள் துறையில் சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள். ‘

‘இறுதியாக மற்றும் மிக முக்கியமாக, ஒருபோதும் குறைந்த தரத்தில் எதனையும் முன்னெடுக்க வேண்டாம். சரியான நேரத்தில், நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் தூண்டப்படலாம். நாங்கள் எங்கள் தரத்தை குறைக்கும்போது, அது ஒரு தொழில்முறை நிபுணராக நிலையை மோசமடைய வழிவகுக்கும். எனவே ஒழுக்கமான தொழில் வல்லுநர்களாகிய நாம் ஒருபோதும் தேவையான தரங்களை விடக் குறைவான எந்தவொரு தரத்திலும் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது. விதிவிலக்கான விடயங்களுக்கு அடிபணிந்து செயற்டவும் கூடாது.

‘எனது உரையின் இறுதிப் பகுதியாக, இப்போது நான் உங்களை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கிறேன்; ‘தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல்.’ என்பது இவ்விடத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு, ஏனெனில் பல புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் திருப்தியடையாத மற்றும் தீர்ந்துபோன தனிப்பட்ட வாழ்க்கையை வைத்திருப்பதைப் பார்க்கிறோம். இன்று, நாங்கள் அதிக பரபரப்பான கூடிய வாழ்க்கையை வாழ்கிறோம். எமது தொழிற்துறைகள் ஓய்வெடுக்க இடமளிக்காமல் உரிய நேரத்தில் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகிறது. இருப்பினும், குறுகிய மற்றும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே தனிப்பட்ட வாழ்க்கைச் செயற்பாடுகளை முன்னெடுக்க நேரம் இல்லை என்று நம்புகிறார்கள். ‘

‘இந்த எதிர்மறை உணர்வு வேலை சோர்வு, குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவை சீர்குலைத்தல், இன்பம் இழப்பு மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து தங்கள் வேலைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளவர்கள் மன அழுத்தம் மற்றும் எரிச்சல் உணர்வுகளை கையாளுகிறார்கள் என அறியப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தொழிலில் ஓய்வெடுக்க நேரம் இல்லையென்றால், அவர்களின் செயல்திறன் குறைவடைந்துவிடும். மேலும், அதிகப்படியான வேலை காரணமாக ஒரு நபர் வீட்டில் ஏற்படும் மோதல்களை தீர்க்க முடியாதபோது, அவன் அல்லது அவள் வாழ்க்கையின் இரு பகுதியையும் இழப்பார்கள். வழக்கமாக, வீடு குழப்பமாக மாறும்போது, பணியிடம் ஒரு நரகமாக மாறும். ‘

‘வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை’ என்பதற்கு உறுதியான வரையறை இல்லை என்றாலும், வேலை-வாழ்க்கை சமநிலை என்பது வேலையின் போதும் வீட்டிலும் ஒருவரின் முழு வாழ்க்கையையும் திருப்திப்படுத்துவதாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இருப்பினும், நீங்கள் மிகவும் நேர்மையான நபராக இருந்தால், திருப்தியை அடைய முடியும். நீங்கள் கூட பரபரப்பான மக்களில் ஒருவர். எனது வாழ்க்கையில் வேலை-வாழ்க்கை சமநிலையை நான் எவ்வாறு அடைகிறேன் என்பதை ஒரு எடுத்துக்காட்டுடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ‘

‘முதலில், முன்னுரிமைகள் தீர்மானித்தல்; உங்களுக்கு மிக முக்கியமானதைப் பற்றி தீர்க்கமாக சிந்தித்தல், மேலும் வேலை மற்றும் வீட்டில் உங்கள் முன்னுரிமைகளை பட்டியலை உருவாக்கவும். நான் என்ன செய்யத் தொடங்க வேண்டும் என்ற இந்த முக்கிய கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வதன் மூலம் உங்கள் நேரத்தை முகாமாத்துவம் செய்யுங்கள். செய்வதை நிறுத்தவா? தொடர்ந்து செய்யவா? மேலும் செய்யவா? குறைவாக செய்யவா? என்ற அடிப்படையில் ஆராயுங்கள்.

‘இரண்டாவதாக, குறிப்பிட்ட இலக்குகளை அமைத்தல்; உங்கள் முன்னுரிமைகள் பட்டியலை எடுத்து அவற்றை உறுதியான மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளாக மாற்றவும். முக்கியமாக செய்ய வேண்டியவைகளுக்கு மத்தியில் குறைந்த நேரம் எடுக்க கூடிய செயற்பாடுகளுக்கு உங்களுடைய முன்னுரிமையை குறைத்துக்கொள்ளுங்கள்.’

‘மூன்றாவது, ஒரு நெகிழ்வான பணி அட்டவணை; வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையை பராமரிக்க ஒரு பணி அட்டவணையை வைத்திருப்பது முக்கியம். மேலும், ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பில் சமமான கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அட்டவணை பணியில் ஒரு நபரின் செயல்திறனை சாதகமாக பாதிக்கும் மற்றும் மாற்று மன அழுத்தத்தை நுட்பமாக முகாமைத்துவம் செய்யவும் உதவும்’

‘நான்காவது, எல்லைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதற்கு நியாயமான மற்றும் யதார்த்தமான வரைமுறைகளை கட்டமைத்துக்கொள்ளுங்கள், வேலைத் தளம்,. என்ற இரண்டு இடங்களிலும் அதனைச் செய்யுங்கள். இந்த வரையறைகளை உங்கள் மேற்பார்வையாளர், சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலதிகமாக தொழில் ரீதியான செயற்பாடுகள் இல்லாதபோது நேரத்தை வீட்டிற்காக ஒதுக்கிகொள்ளுங்கள்.

‘ஐந்தாவது, உங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள், இதுவரை, உள திருப்திக்கான மிகப்பெரிய ஆதாரமாகும். உங்கள் தனிப்பட்ட உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் பணியின் செயல்திறன் என்பன அதிகரிக்கும். ‘

‘ஆறாவது, பொழுதுபோக்குகளை ஊக்குவிக்கவும் ஒரு நல்ல வேலை-வாழ்க்கை சமநிலை என்பது வேலைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட மட்டத்தில் பொழுதுபோக்குகளாக நீங்கள் செய்யும் காரியங்கள். எனவே, ஒரு பொழுதுபோக்கைக் கொண்டு, வேலையையும் குடும்பத்தையும் நிர்வகிக்கும் போது உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். ‘

‘இறுதியாக, கடுமையாக இருப்பதை புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள்; நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவது எல்லோரும் சிறந்து விளங்க அவசியமான திறனாகும்.தொழிலுக்கான நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்வதால் மன அழுத்தம் குறைவடையும் என்பதுடன், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் சிறந்ததாகும்.

‘வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையிலான சமநிலையை அடைவதற்கான எளிமை நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தது. உங்களுக்கு வழங்கப்பட்ட பணிச்சுமைக்கு அதிகமாக சுவை வருகிற போது அது தொடர்பில் நீங்கள் முறைப்பாடு செய்யலாம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க உங்களை அனுமதிக்காது. இருப்பினும், எல்லா கட்டுப்பாடுகள், பொறுப்புகள் மற்றும் பணிகள் உங்களுக்கு முன்னால் இருப்பதால், நாங்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது; பழைய பழமொழி ‘தேவைக்கு வரம்பு இல்லை’ என்று சொல்வது போல இது எங்கள் தேர்வுகள் இருக்க வேண்டும். ஆகவே, உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும் என்றால் சிறந்ததாகும்.’

குழப்பமடைந்தவர்களும், தனிப்பட்ட வாழ்க்கையின் இழப்பில் தொழில்ரீதியான வெற்றியை அடைந்தவர்களும் அவரது வாழ்க்கையில் அவருக்குத் தேவையானதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை, அதேபோல் அவர்கள் பாழடைந்துவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நம்புகிறேன்.ஆகையால், உங்கள் தொழில் உங்களைச் சுமக்க முயற்சிக்கும் இலக்கைப் பொருட்படுத்தாமல், உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதை வேறுபடுத்திக் கொள்ளுங்கள். எல்லைகளை தகர்த்து மாற்றங்களை உருவாக்குவோம்’ என்ற எண்ணகருவை மையமாக கொண்டு (16 ஆம் திகதி) இடம்பெற்ற 35 ஆவது சர்வதேச பட்டய கணக்காளர் மாநாட்டில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

குழப்பமடைந்தவர்களும், தனிப்பட்ட வாழ்க்கையின் இழப்பில் தொழில்ரீதியான வெற்றியை அடைந்தவர்களும் அவரது வாழ்க்கையில் அவருக்குத் தேவையானதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை, அதேபோல் அவர்கள் பாழடைந்துவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நம்புகிறேன்.ஆகையால், உங்கள் தொழில் உங்களைச் சுமக்க முயற்சிக்கும் இலக்கைப் பொருட்படுத்தாமல், உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதை வேறுபடுத்திக் கொள்ளுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team