"ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு முதலாவது கடனுதவி கிடைக்குமென நம்பிக்கை" - அலி சப்ரி! - Sri Lanka Muslim

“ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு முதலாவது கடனுதவி கிடைக்குமென நம்பிக்கை” – அலி சப்ரி!

Contributors

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில், ஓகஸ்ட் மாதமாகும் போது முதலாவது கடனுதவி தொகை கிடைக்குமென நம்புவதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலையை ஆசிர்வாதமாக பயன்படுத்தி மீண்டெழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கஷ்டமான சூழ்நிலையில் சவாலை ஏற்றது தொடர்பில் பிரதமர் ரணிலுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.அவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குகிறோம்.

பல நாடுகள் இது போன்ற சவால்களை முகம்கொடுத்து மீண்டுள்ளன. ஜப்பான், தென்கொரிய, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் மீண்டெழுந்தன. இந்தியாமன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த போது பல மாற்றங்களை செய்து மீண்டு வந்தது.

தற்போதைய நெருக்கடி நிலையை ஆசிர்வாதமாக பயன்படுத்தி மீண்டெழ வேண்டும். தற்போதைய நிலையில் உணவு, மருந்து, பெற்றோல், டீசல்  போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. மருந்து நெருக்கடிக்கு நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. ஓரிரு மாதங்களில் மருந்து தொடர்பான பிரச்சினை தீரும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளை சிறப்பாக முன்னெடுக்க முடிந்தது. நிதி மற்றும் சட்ட ஆலோசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக ஓகஸ்ட் மாதமாகும் போது முதலாவது கடனுதவி தொகை கிடைக்குமென நம்புகிறேன்.

சர்வசேத நிதியத்தின் அங்கத்துவ நாடான இலங்கை வீழ்ச்சியடையாமல் மீட்கும் தேவை அதற்கு உள்ளது. பலமாக எழுச்சி பெறுவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வரை வேறுவழிகளில் உதவி பெறப்பட வேண்டும்.சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடான பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் சில நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கலாம். காலத்திற்குக் காலம் மாறாத பொருளாதார கொள்கை உருவாக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் இரு தரப்பும் பல்வேறு வாக்குறுகளை வழங்குகின்றனர். தோட்டத்தொழிலாளருக்கு 1,000 ரூபா வழங்குவதாக ஒரு தரப்பு கூறினால்   1,500 ரூபா வழங்குவதாக மறுதரப்பு அறிவிக்கும். பசளை நிவாரணம் தொடர்பில் உறுதி வழங்கப்படும். ஆனால் எவ்வாறு அவற்றை வழங்குவதென்று சிந்திப்பதில்லை. நலன்புரி செயற்படுகளால் சுமக்க முடியாத நிலைக்கு முகம் கொடுத்துள்ளோம். நாடு முன்னோக்கி செல்வதற்கு வரி செலுத்தாதது தொடர்பான 02 பில்லியன் கோப்புகள் இருந்தன. அது குறைந்துள்ளது. ஒரு வீதம் மாத்திரம் வரி செலுத்தி எவ்வாறு நாட்டை முன்னேற்ற முடியும்.

Web Design by Srilanka Muslims Web Team