ஓட்டமாவடியில் அல் குர்ஆனை மனனம் செய்த முதன்மை மாணவி கௌரவிப்பு! - Sri Lanka Muslim

ஓட்டமாவடியில் அல் குர்ஆனை மனனம் செய்த முதன்மை மாணவி கௌரவிப்பு!

Contributors

ஓட்டமாவடியில் இயங்கி வரும் மத்ரஸது ஸைத் பின் தாபித் கலாசாலையில் முழு குர்ஆனையும் மனனம் செய்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) இடம்பெற்றது.

கலாசாலையின் அதிபர் அல் ஹாபிழ் ஏ.எல்.நிஜாம்தீன் தலைமையில் இந்நிகழ்வு மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த மத்தரஸாவில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதலாவது மாணவியான எம்.எச்.சதூகா ஸைய்னப் பரிசில்கள் மற்றும் சினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா (வை.எஸ்.ஓ),  ஆசிரியை எம்.எஸ்.எஸ். இனாயா தம்பதிகளின் புதல்வியாவார்.

இந்நிகழ்வில்இ அதிதிகளாக கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஏ.எம்.தாஹிர், சட்டத்தரணி ஹபீப் றிபான், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கல்குடா ஜம்இய்யது உலமா தலைவர் எம்.எம்.தாஹிர் மற்றும் உலமாக்கள், பாடசாலைகளின் அதிபர்கள்,  ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team