ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக ஐ.தே.க இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதியால் நியமனம் » Sri Lanka Muslim

ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக ஐ.தே.க இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதியால் நியமனம்

furha

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இணைத்தலைவராக கல்குடாத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் லெப்பைத்தம்பி புர்ஹான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில்விக்கரமசிங்கவின் பரிந்துரைக்கமைய இந்நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்>கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவிற்கு இணைப் பொறுப்பாளராகவும் இப் பிரதேசத்தின் அனைத்து அரச திணைக்களங்களினதும்>மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தேசிய அபிவிருத்தி திட்டத்துக்கமைய அமுல்படுத்தவும்>மேற்பார்வை செய்யவுமான பொறுப்பினையும் இந்நியமனம் வழங்குவதாகவும் இந் நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெப்பைத்தம்பி புர்ஹான் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் இணைப்பாளராக தற்போது செயற்பட்டு வருவதுடன் 1994ல் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகத் தெரிவாகி உதவித் தவிசாளராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதுடன் ஐ.தே.க. கொத்தணி அமைப்பாளராகவும் பல வருடங்கள் செயற்பட்டு கட்சி மாறாமல் ஐக்கிய தேசியக் கட்சியினை கல்குடாத் தொகுதியில் வளர்க்கப் பாடுபட்டவர்.

வாழைச்சேனை அந்நூர்>மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி>மீராவோடை அல்ஹிதாயா பாடசாலை>ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான லெப்பைத்தம்பி புர்ஹான் மீராவோடை இளைப்பாறிய கிராம சேவையாளரான மர்ஹூம் லெப்பைத்தம்பி இளைப்பாறிய கிராம சேவையாளரான மர்ஹூம் முகம்மது சரிபின் மகள் றைஹானாவீவியின் புதல்வருமாவார்.

Web Design by The Design Lanka