ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடிப்பு: அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள் - Sri Lanka Muslim

ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடிப்பு: அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள்

Contributors

வங்கதேசத்தில் மேற்கிந்திய தீவுகள் (19 வயது) வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது.

19 வயதுக்குட்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசம் சென்றுள்ளது. இரண்டாவது 50 ஓவர் போட்டியில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், சிட்டகாங்கில் ஆக்ராபாத் ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது, ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது.

இதையடுத்து தொடரில் தொடர்ந்து பங்கேற்க, மேற்கிந்திய தீவுகள் அணியினர் மறுத்தனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி மோடியுல் இஸ்லாம் கூறுகையில், கடந்த 7ம் திகதி தேசிய அளவில் ஸ்டிரைக் நடந்தது. அன்று மாலை சிறிய அளவிலான குண்டு வெடித்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது என்றும் வீரர்கள் பயப்பட வேண்டாம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தெரிவித்துள்ளோம் எனவும் கூறினார்.

பொலிசார் சமாதானத்தை அடுத்து போட்டி வேறு திகதிக்கு மாற்றப்பட்டு, தொடர் நடக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team