ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்துச் சட்டம் இயற்றியதா நல்லாட்சி அரசாங்கம்? » Sri Lanka Muslim

ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்துச் சட்டம் இயற்றியதா நல்லாட்சி அரசாங்கம்?

sex

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Zafar Ahmed


ஓரினச் சேர்க்கையை இந்த அரசாங்கம் அங்கீகரித்துச் சட்டம் இயற்றி மனித உரிமையைப் பேண வேண்டும் என்று ஐ .நா.சபை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பலமாக அடிபடுகின்றன. நமது அரசாங்கத் தரப்பின் தொடர் மெளனமும் இங்கே கவனிக்கத்தக்கது…சரி.. ஓரினச் சேர்க்கை இலங்கையில் சட்டமாக்கப்பட்டால் ஊடகங்களில், சமூக வலைதளங்களில், எவ்வாறான செய்திகள் இடம் பெறும்.சும்மா ஒரு கற்பனை

1 ‘ நான் காலி கொழும்பு ஏசி பஸ்ஸில் பின் சீட்டில் உட்கார்ந்து வந்து கொண்டு இருந்தேன்.என் பக்கத்தில் இருந்த பேர்வழி திடீர் என்று எனது கைகளை வருட ஆரம்பித்து கேணைத்தனமாய் சிரித்துக் கண்ணடித்தான்.வந்த கோபத்தில் அவனைப் போட்டு அறைய அவன் பல்லெல்லாம் உடைந்து முகம் எல்லாம் இரத்தம்.எனக்கெதிராய் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்து இருக்கிறான்.என் தொழிலும் போய்விட்டது.விசாரணைகளை எதிர் நோக்கி இருக்கிறேன்’ – ஞாயிறு லங்கா தீப பத்திரிகையில் 15 ம் பக்கத்தில் ஒரு வாசகர் கடிதத்தின் சுருக்கம்

2 இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையைத் தடை செய்யக் கோரி கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பட்டம் செய்த தெளஹீத் ஜமாத் முக்கியஸ்தர்கள் அனைவரும் கைது . தெளஹீத் ஜமாத்துக்கு எதிராக நாளை ஞானசார ஆர்ப்பாட்டம்.

3 ‘ஓரினச் சேர்க்கைத் திருமணங்களும் அங்கீகரிக்கபட்டு மெரேஜ் சார்டிபிகேட்டும் திருத்தப்பட வேண்டும்’ என்று கூறி ‘ சிவப்பு ரோஜாக்கள்’ என்ற அமைப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து இருப்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இந்தப் போராட்டத்திற்கு ‘ அம்பலாங்கொட கொல்லோ ‘ என்ற அமைப்பு கொலை மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பங்கு பெறும் ஆண், பெண் ஜோடிகளின் பாதுகாப்புக்கு ஐயாயிரம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அமைப்பின் தலைவி ரோஷினி பெர்ணாண்டோ தெரிவிப்பு

4 ‘இலங்கையை முன்னுதாரணமாக க் கொண்டு இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டிலும் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா விகடனில் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் சர்ச்சை.சென்னை மயிலாப்பூரில் இருக்கும் சாருவின் வீட்டுக்கு ஏழடுக்கு பொலீஸ் பாதுகாப்பு..கவிஞர் மனுஷ்ய புத்திரன் கவலை..

5 சட்டமூலத்தை ரத்து செய்யக் கூறி வடக்கு கிழக்கு எங்கும் மக்கள் தொடர் ஹர்த்தால். இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
சட்ட மூலத்தின் பின்னணியில் இருப்பது இலுமினாட்டிகள் – இந்தியாவின் ஹீலர் பாஸ்கர், சீமான்,இலங்கையில் நுஸ்ரான் பின்னூரி ஆகியோர் தெரிவிப்பு..

6 மேல் மாகாண சபையில் ஒரே ஒரு பெரும்பான்மை வாக்கால் ஓரினச் சேர்க்கை சட்ட மூலம் நிறைவேறியதைத் தொடர்ந்து அடிதடி..ஆவணங்கள் தீவைத்து எரிப்பு.இருபத்தைந்து பேர் படுகாயம்..மூவரின் நிலை கவலைக்கிடம்..’ இலங்கை காட்டுமிராண்டிகளின் தேசமாய் மாறிக் கொண்டு இருப்பதாக’ வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்..

7 சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து மொக்கை கவிதைகளுடன் ஃபேக்குகள் படையெடுப்பு
உதாரணத்திற்கு

தனிமை விரும்பி with ஆணழகன் and 72 others

என் இளமையை எரித்து யார் யாருக்கோ
பொருள் ஈட்டிக் கொடுக்க இனி தூர தேசம் வரத் தேவை இல்லை..பீட்டர்
அனைத்தையும் பார்த்துக் கொள்ள அரசு இருக்கும் போது சீதனம் இனி எதற்கு பீட்டர் ?
சட்டமூலத்தின் சபாநாயகர்கள் இருக்கும் திசைக்கு சலூட் அடித்துவிட்டு சீக்கிரம் அறைக்கு வந்து சேர்ந்துவிடு.
இலங்கை செல்லும் அடுத்த விமானத்தில்
ஒன்றாய் பயணிப்போம்..

8 மகாநாயக்க தேரர்களே! இப்படி ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இருப்பதை நான் காலையில் பத்திரிகை வாசித்து தான் தெரிந்து கொண்டேன்.இனிமேல் இப்படியான அவலட்சணமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் நான் பதவி துறந்து மக்களுடன் போய் உட்காருவேன் – யாரோ ஒருவர்

9 பிறந்ததில் இருந்தே கார்ப்பு கரண்டிகளைத் தவிர கையால் சாப்பிட்டே இராத, இத்தாலியன் மாடல் டாய்லட்டுகளுக்குப் போய் வந்தவுடன் கவ் பாய் தொப்பி போட்டு, ஃபாரிஸ் ஃபேர்பியூம் பூசிக் கொண்டு அமெரிக்கனோ காபி குடிக்கும் மேட்டுக்குடி வர்க்கம் இலங்கையின் மத கலாச்சாரப் பின்னணி எதையுமே கணக்கில் எடுக்காமல் எம்மீது திணித்த திணிப்பே இந்த சட்டமூலம் – வாட்ஸ் அப்…

Web Design by The Design Lanka