ஓர் இனம் மற்றுமொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி » Sri Lanka Muslim

ஓர் இனம் மற்றுமொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

Contributors

ஒரு இனம், மற்றுமொரு இனத்தை அடிமைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

சர்வதேச சமூகம் என்ன தெரிவித்தாலும், தெய்வேந்திர முனையில் இருந்து, பருத்தித்துறை வரையில் பயணிப்பதற்கு முடிந்தமை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரின் அளவை தற்போது 12,000 வரையில் குறைத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்தி, மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இனத்தவர்களும் சந்தோசமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதனை பார்ப்பதே தமது ஒரே இலக்கு என ஜனாதிபதி கூறினார்.

வட மாகாணத்தில் புற்றுநோய் நோயாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலைக்கு 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(nf)

Web Design by Srilanka Muslims Web Team