ஓர் பெண்ணுக்கான கல்வி ஓர் சமுதாயத்திற்கான கல்வி!- Calling for New Application » Sri Lanka Muslim

ஓர் பெண்ணுக்கான கல்வி ஓர் சமுதாயத்திற்கான கல்வி!- Calling for New Application

ba

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நல்லதொரு முன்மாதிமிரிக்க குடும்பத் தலைவிகளை உருவாக்கும் நோக்கில் ஸலபுகளது விளக்க அடிப்படையில் அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவை தூய வழியில் விளங்கிட இலங்கை தஃவா களத்தின் முன்னணி மத்ரஸாவான “இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி” நிர்வாகத்தினரது மற்றுமொரு முயற்சியே பெண்களுக்கான தனியான பிரத்தியேக பிரிவொன்றாக விளங்கும் வெலிகமையில் அமைந்திருக்கும் “ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி” எனும் மத்ரஸாவாகும்.

இலங்கையின் தலைசிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழாமின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் தரமான இக்கலாபீடம் அதற்கான விண்ணப்பங்களை நாடலாவிய ரீதியிலிருந்தும் கோரியிருப்பதால் மார்க்கக் கல்வியை திறம்பட நேரிய முறையில் கற்க விரும்பும் பெண்கள் இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் தமது விண்ணப்பங்களை உரிய விலாசத்திற்கு அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

ஒரு பெண் கல்வி கற்பது ஓர் சமுதாயம் கல்வி கற்பதற்கு சமமாகும்; ஏனெனில் அப்பெண் சரியான முறையில் கற்கும் போது எதிர்கால சந்ததியினரான தமது பிள்ளைகளை சிறு வயது முதல் தரமான நேரிய பாதையில் இட்டுச் செல்வாள், அத்தோடு தாயின் பாசறையே குழந்தைகளின் ஆரம்பப் பாடசாலையாகும், அடிப்படையான இப்பாடசாலை ஒழுங்கமையும் பட்சத்தில் அதாவது கல்விப் பின்புலத்தைக் கொண்ட தாயினால் வழிகாட்டப்பட்ட எந்த பிள்ளையும் அடுத்தடுத்து வரும் அனைத்து கட்டங்களிலும் நெறி பிறழாது சரியான பாதையை நோக்கிச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே தாய் குலத்திற்கு கல்வி புகட்டுவதன் மூலம் சிறந்த மறுமலர்ச்சிமிக்கதொரு சமுதாயத்திற்கு வித்திடுவோம்.

“முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.” (சூறா:தௌபா 122)

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ
09/10/2017

ba

Web Design by The Design Lanka