கஃபாவிக்குப் புதிய பூட்டு - Sri Lanka Muslim
Contributors

கஃபாவிக்கு கடந்த வாரம் புதிய பூட்டுப் பொருத்தப்பட்தோடு அதன் சாவிகள் கஃபாவின் பாதுகாவலர் ஷேய்க் அப்துல் காதர் அல் ஸைபியிடம் சவூதி இளவரசர் காலித் அல் பைசலால் ஒப்படைக்கப்பட்டது.
கஃபா கடந்த வாரம் ஸம்ஸம் தண்ணீராலும் பன்னீராலும் கழுவப்பட்டு அதன் புதிய பூட்டு பொருத்தப்பட்டது.
புதிய பூட்டும் அதன் சாவிகளும் நிக்கல் உலோகத்தால் தயாரிக்கப்ட்டதோடு 18 கரட்டில் தங்கமுலாமும் பூசப்பட்டது.
இந்த பூட்டில் குர்ஆன் எழுத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரு பெரும் பள்ளிவாசல்களின் மேற்பார்வையின் கீழ் பூட்டும் , அரசர் அப்துல் அஸீஸ் தகவல் மற்றும் தொழிநுட்பவியல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் சாவியும் தயாரிக்கப்பட்டன.
கஃபாவின் பழைய பூட்டும் சாவியும் இருபெரும் பள்ளிவாசல்களின் கண்காட்சியில் வைத்துப் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

makka2

 

makka3

Web Design by Srilanka Muslims Web Team