கசினோ சூதாட்டம் இலங்கைக்கு பொருத்தமானது! - Sri Lanka Muslim

கசினோ சூதாட்டம் இலங்கைக்கு பொருத்தமானது!

Contributors

கசினோ சூதாட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, இதனால் நாட்டின் நாகரிகத்திற்கும் கலாசாரத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனகூறியுள்ளார்.

அத்துருகிரிய விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கூறுகையில்,

இந்நாட்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக கசினோ சூதாட்டத்தை பற்றிய பேசி வருகின்றனர். கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த சூதாட்டத்தை வெளிநாட்டவர்களும் செல்வந்தர்களுமே விளையாட முடியும்.

கசினோ சூதாட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி கிடைத்தால் நாம் ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே முதலில் இலங்கையில் கசினோவை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் எதிர்காலத்தில் நாங்கள் இதனை விரிவுப்படுத்துவோம்.

கசினோ சூதாட்டத்தினால் நாட்டின் நாகரிகத்திற்கோ கலாசாரத்திற்கோ பாதிப்புகள் ஏற்படபோவதில்லை. நாட்டுக்கு அந்நிய செலாவணி திரண்டு வரும் என கூறியுள்ளார்.

-TC

Web Design by Srilanka Muslims Web Team