கசினோ சூதாட்ட அனுமதிக்கு எதிராக, கொழும்பில் மூவின மக்களும் இணைந்து போராட்டம்! - Sri Lanka Muslim

கசினோ சூதாட்ட அனுமதிக்கு எதிராக, கொழும்பில் மூவின மக்களும் இணைந்து போராட்டம்!

Contributors

கொழும்பில் மிகப்பெரும் சூதாட்ட நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதனை முறியடிக்கும் நோக்குடன் முஸ்லிம், சிங்கள தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் போராட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் சில நாட்களில் இதுதொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரளுமன்றத்திற்கு ஊர்வலமாக செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆராயும் முக்கிய கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முஸ்லிம்  கவுன்சில் தலைவர் என.எம்.அமீன் கலந்தகொண்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்கு வரும்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளக்கூடாதென் தாம் கோரவிருப்பதாக இதன்போது என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார். அத்துடன் புனித இஸ்லாம் மார்க்கமும் சூதாட்டத்தை அனுமதிக்கவில்லை எனவும் இதன்போது அமீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு அங்கிருந்த ஏனைய சமூகங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
பொது விவாதப் பொருளாக மாறியுள்ள கசினோ சூதாட்ட அனுமதியை பெரும்ம்பான்மை சிங்கள சமூகங்களுடன் இணைந்து எதிர்ப்பதும், கசினோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஊர்வலங்களில் பங்கேற்பதும், தேசிய விவகாரங்களில் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் உள்ளனர், அதில் பங்காகளர்களாக உள்ளனர் என்ற தோற்றப்பாடு வலுவடை உதவுமெனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team