கசினோ சூதாட்ட மையங்களுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் – மாதுலுவே சோபித தேரர் - Sri Lanka Muslim

கசினோ சூதாட்ட மையங்களுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் – மாதுலுவே சோபித தேரர்

Contributors

நல்லொழுக்கமுடைய சமூகமொன்றை கட்டியெழுப்ப விரும்பும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கசினோ சூதாட்ட மையங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென மாதுலுவே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கசினோ சூதாட்ட மையங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், அக் கசினோ சூதாட்ட மையங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுவதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க பல்வேறு சூதாட்டங்களுக்கு எதிராக போராடியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கசினோ சூதாட்ட மையங்களினால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவர் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team