கஜிமா வத்த பிரதேசத்தில் தீக்கிரையான வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் - நீதியமைச்சர் அலி சப்ரி நேரில் சென்று ஆராய்வு - Sri Lanka Muslim

கஜிமா வத்த பிரதேசத்தில் தீக்கிரையான வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் – நீதியமைச்சர் அலி சப்ரி நேரில் சென்று ஆராய்வு

Contributors

கொழும்பு வடக்கு, மஹவத்தை கஜிமா வத்த பிரதேசத்தில் தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தற்காலிக வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்பட்ட பகுதிக்கு சென்ற நீதியமைச்சர் அலி சப்ரி, அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இப்பிரதேசத்திற்கு கடந்த புதன்கிழமை நேரடியாக விஜயம் செய்த நீதி அமைச்சர் அலி சப்ரி பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இப்பகுதியில் தீ அனர்த்தத்தினால் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நீதியமைச்சர் அந்த வீடுகளை பார்வையிட்டார்.

அதனையடுத்து அவர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகளை வழங்குதல் போன்றவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிகழ்வில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் களனிநதி விகாரையின் விகாராதிபதி அக்குரஸ்ஸே சாகர தேரர், நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பயாட் பாக்கிர் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Web Design by Srilanka Muslims Web Team