கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்யுங்கள் - ஆளும் கட்சி பெண் Mp அரசுக்கு ‘அட்வைஸ்..! - Sri Lanka Muslim

கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்யுங்கள் – ஆளும் கட்சி பெண் Mp அரசுக்கு ‘அட்வைஸ்..!

Contributors
author image

Editorial Team

மதுபானசாலைகளை அதிகாலை ஒருமணிவரை திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும். அரச முயற்சியில் அவற்றைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் . அரசாங்கத்தின் அனுசரணையில் கஞ்சா வளர்ப்பு செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக, அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் நாட்டிலுள்ள மதுபானக் கடைகள் இன்று காலை 09 மணிக்கு திறக்கப்பட்டு 11 மணியுடன் மூடப்படுகின்றன. மூடப்படுகின்ற நேரத்தை அதிகாலை 01 மணியாக அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனையை சமர்ப்பிக்கின்றேன்” என்று அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team