கஞ்சா செடிகளை வளர்க்கக்கூடிய வகையில் சபையில் திருத்தச் சட்டம் - Sri Lanka Muslim

கஞ்சா செடிகளை வளர்க்கக்கூடிய வகையில் சபையில் திருத்தச் சட்டம்

Contributors

கஞ்சா செடிகளை வளர்க்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். கஞ்சா செடிகளை வளர்ப்பது தொடர்பிலான தடையை தளர்த்தும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா செடிகளின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் ஆயுர் வேத மருத்துவத்திற்கு கஞ்சா பயன்படுத் தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கஞ்சா போதைப் பொருளை மருத் துவ நோக்கங்களுக்காக வளர்க்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மருந்துப் பொருளாகக் கருதி கஞ்சாவை வளர்க்க அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு அனுமதியளிக்கப்படக் கூடிய வகை யில் சட்டத்திருத்த யோசனை பாராளு மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இச் செடியை உரிய முறையில் பயன்படுத்தினால் வெளிநாடுகளுக்கு கூட வலி நிவாரணியாக ஏற்றுமதி செய்ய முடியும் என அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.(valamp)

Web Design by Srilanka Muslims Web Team