'கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் ஆதரிக்கின்றதா?' - Sri Lanka Muslim

‘கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் ஆதரிக்கின்றதா?’

Contributors

நா.தனுஜா)

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி, ‘கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் ஆதரிக்கின்றதா?’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து ஹர்ஷ டி சில்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, ஊடகவியலாளர் ஒருவர் (இணைய ஊடகமான ‘சியரட்ட’வின் ஊடகவியலாளர் சுஜீவ கமகே) கடத்தப்பட்டு, கறுப்பு நிற வான் வண்டியொன்றில் ஏற்றப்பட்டதுடன் அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களைக் கூறுமாறு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் வீதியோரத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களே, மீண்டும் கடத்தல் சம்பவங்கள் தொடர்வதை நீங்கள் அனுமதிக்கப் போகின்றீர்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team