கடந்த 24 மணித்தியாலங்களில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்தது என்ன..? - Sri Lanka Muslim

கடந்த 24 மணித்தியாலங்களில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்தது என்ன..?

Contributors

டி.கே.பி. கபில –

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில், இன்றுக்காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் ஒரே பார்வையில் தருகின்றோம்.

கடந்த 24 மணிநேரத்தில் 32 விமானங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

விமானப்பயணிகள் 2,204 பேருக்கு பயண வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

730,000 கிலோகிராம் நிறையுடைய பொதிகள், 11 விமானங்களில் போக்குவரத்து செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவுக்கு 15 விமானங்களில் 1,140 பேர் வருகைதந்தனர்.

மாலைத்தீவு மாலேயிலிருந்து 149 பயணிகள் வந்தனர்.

டுபாயிலிருந்து 147 பயணிகள் வருகைதந்தனர்.

அவர்கள் அனைவரையும் இராணுவத்தினர், தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இக்காலப்பகுதியில் 17 விமானங்களில் 1,064 பயணிகள், கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சவுதி அரேபியாவுக்கு 149 பேரும் டுபாய்க்கு 170 பேரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா பயணங்களை முன்னெடுக்கப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து 122 பேர் வருகைதந்துள்ளனர்.

 341,000 கிலோகிராம் நிறையைக் கொண்ட பொதிகளை சுமந்துகொண்டு 6 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளன.

 ஐந்து விமானங்களில்   398,000 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கட்டுநாயக்க  விமான நிலையத்திலிருந்து கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team