கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியை மீளளிப்பதற்கு கடற்படை இணக்கம்-நஜீப் அப்துல் மஜீத் - Sri Lanka Muslim

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியை மீளளிப்பதற்கு கடற்படை இணக்கம்-நஜீப் அப்துல் மஜீத்

Contributors

-எம்.எம்.ரசாட் முஹம்மட்-

 

 
கிண்ணியா தளவைத்தியசலைக்கு சொந்தமான விடுதியும் அதன் நிலப்பரப்பும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு கடற்படையினரால் மீள கையளிப்பதற்குறிய நடவடிக்கைகள்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் மேட்கொள்ளப்பட்டுள்ளன.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர்இ பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கிண்ணியா தளவைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இக்கட்டிடத்தொகுதி மீள கையளிக்கப்படவிருக்கிறது.

 

இந் நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை 9.00 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இதற்கான ஆவணங்களும் கடற்படை அதிகாரிகளினால் சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக முதலமைச்சரின் வேண்டுகோளுக்கமைய கிண்ணியா கடற்படைப் பொறுப்பதிகாரி லப்டிணன் கருணாநாயக்கவிற்கும் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் எ.எஸ்.எம்.பாரிசிற்குமிடையில் இன்று (26) கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இந்த விடுதியினை தளவைத்தியசாலைக்கு கையளிப்பதன் மூலம் நிபுணத்துவமிக்க வைத்தியர்கள் தங்கி நின்று வைத்திய சேவையை வழங்குவதற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதல்வர் எடுக்கவுள்ளார்.

.

Web Design by Srilanka Muslims Web Team