கடலில் மூழ்கி மாணவன் மரணம், கல்முனையில் சம்பவம்..! - Sri Lanka Muslim

கடலில் மூழ்கி மாணவன் மரணம், கல்முனையில் சம்பவம்..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார். உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.

மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் மூலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team