கடலுக்குச் சென்ற ஓட்டமாவடி அசனார் ஜுனைதீனை காணவில்லை. » Sri Lanka Muslim

கடலுக்குச் சென்ற ஓட்டமாவடி அசனார் ஜுனைதீனை காணவில்லை.

images-4-1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


கடந்த 14 ம் திகதி சனிக்கிழமை ஐந்துநாள் பயணத்தை மேற்கொண்டு மூன்று பேருடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான ஓட்டமாவடி 3ம் வட்டார மீன்பிடி வீதியைச் சேர்ந்த அசனார் ஜுனைதீன் (வயது 45) என்பவரை கடலில் வைத்து காணவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

மீன் பிடிப்பதற்காக வாழைச்சேனை கடலிலிருந்து இயந்திரப்படகில் மூன்றுபேர் சென்றுள்ளனர் சென்ற மூவரும் நேற்று முன்தினம் இரவு (17) மீன்பிடிக்க வலைகளை தயார்படுத்திவிட்டு ஆழ்கடலில் இயந்திரப்படகில் தூங்கியிருக்கின்றனர் சிறிது நேரத்துக்குப் பின்னர் இருவரும் கண்விழித்துப் பார்க்கின்றபோது குறித்த அசனார் ஜுனைதீன் என்பவரை காணவில்லை எனத் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கடலில் காணாமல் போன அசனார் ஜுனைதீனை தேடும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka