கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் திறந்து வைப்பு-படங்கள் - Sri Lanka Muslim

கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் திறந்து வைப்பு-படங்கள்

Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் 22-08- இன்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 

இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும், நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத்,  மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

 

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் விஷேட உரை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூலினால் அரபு மொழியில் நிகழ்த்தப்பட்டது இதனை திஹாரிய தன்வீர் அகடமியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (மதனி) தமிழில் மொழி பெயர்த்தார்.

 

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்களான பாரூக்,குறைஷ், சமூக சேவையாளர் காதர் ஹாஜியார் , மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் நிர்வாகிகளான ஹஸனலி,ஆதம் உட்பட  உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள்,மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

01

 

02

 

03

 

04

 

05

 

06

 

07

Web Design by Srilanka Muslims Web Team