கட்சித் தலைமைகள் கட்டாரில்.....!!! (கவிதை) » Sri Lanka Muslim

கட்சித் தலைமைகள் கட்டாரில்…..!!! (கவிதை)

party2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வெறுப்புத் தரும் விடயங்கள்


Mohamed Nizous

கட்சித் தலைமைகள்
கட்டாரில் சிரித்துப் பேசி மகிழ
மச்சானும் மச்சானும்
கட்சிக்காய் போடும் சண்டை.

கடைத் தேங்காய் வாங்க
காசின்றி மக்கள் வாட
கடலோனியா நாடு பற்றி
கவலைப்படும் நல்லாட்சி.

பிள்ளை பெறும் வார்ட்டில்
உள்ள தாய்மார்க்கு
சொல்லால் வதை செய்யும்
முள்ளம் பன்னிக் கூட்டம்

ஈரோப் நாடொன்றில்
இவரு பெட்டில் படுத்துக் கொண்டு
ஊரில் கிராணில் இருப்பவனை
உசுப்பேத்தி போடும் போஸ்ட்

பெண்களின் போட்டோவை
பேஷ் புக்கில் போட்டு
கண்ணியக் குறைவாக
கதையளக்கும் கழுதைகள்.

தப்புக்காய் பிடிக்காமல்
பிடிப்பதற்காய் தப்புத் தேடும்
காக்கிச் சட்டை போட்ட சில
போக்கிரிக் காக்கிச் சட்டை

சீனா பொம்மையில்
சிகப்பு லைட் பத்த
வீணாய்ப் பாடுகின்ற
விவஸ்தை கெட்ட குரல்

அடிக்கடி வெட்டி
அவஸ்தைகள் தந்து
கடுப்பேற்றும் சேவை செய்யும்
கன்றாவி இ.மி.ச.

இப்படிப் பல விடயம்
இதயத்தை வெறுப்பேற்றும்
இருந்தாலும் என்ன செய்ய
எதிர்க்க யாருமில்லை

part

Web Design by The Design Lanka