கட்சி தாவப்போகும் ராஜித சேனாரத்ன..? - Sri Lanka Muslim
Contributors

தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் வேறு அரசியல் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல்வாதிக்கு அரசியல் கட்சியைவிட, கட்சியின் கொள்கைகளே முக்கியமான விடயம் என வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நபர் சார்ந்த அரசியல் கட்சியை விட, ஒரு அரசியல்வாதிக்கு ஒரு கட்சியின் கொள்கைகளே முக்கியம் என அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஒரு ஊடகவியலாளரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பல கட்சிகளுக்கு தான் தாவியிருந்தாலும், தன்னுடைய கொள்கைகள் அப்படியே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கொள்கைகள் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக வேறு அரசியல் கட்சிக்குச் தான் செல்லலாம் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.    

Web Design by Srilanka Muslims Web Team