கட்டாக்காலி நாய்கள் மறுபடியும் அதிவேக நெடுஞ்சாலையில் - Sri Lanka Muslim

கட்டாக்காலி நாய்கள் மறுபடியும் அதிவேக நெடுஞ்சாலையில்

Contributors

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மறுபடியும் கட்டாக்காலி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களாக நாய்கள் உட்பட எந்த மிருகமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்கள்  குழுவாக தெருவை கடப்பதை காணக்கூடியதாக இருந்தது.

விறகு கொண்டு செல்லும் சிறிய வகை லொறி ஒன்றை கடந்து செல்லும் இந்தகட்டாக்காலி நாய்கள்  பாதையின் பல இடங்களில் இரு மருங்கிலும் போடப்பட்டுள்ள தடுப்புகளில் உள்ள இடைவெளிகளை பயன்படுத்தி உள்ளே வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(m)

 

 

Web Design by Srilanka Muslims Web Team