கட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள் - Sri Lanka Muslim

கட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள்

Contributors

கத்தார் நாட்டில் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலககோப்பை போட்டிகளை நடத்தும் திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

மோசமான பணிநிலைமைகள், மோசமான தங்குமிட ஏற்பாடுகள், மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமை என்று பல வகையிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயங்கரமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோன்ற விமர்சனங்களை ஐநாவும் முன்வைத்திருக்கிறது.

வெளிநாட்டு தொழிலாலர்களின் உரிமை சாசனம் ஒன்றின் மூலம் இப்படியான துஷ்பிரயோகங்களை தாம் கையாள முயல்வதாக கத்தார் நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இப்படியாக கத்தாரில் சிரமப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியர்கள். அவர்களில் நேபாள நாட்டவரும் அதிகம். bbc

Web Design by Srilanka Muslims Web Team