கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் இலங்கை வர தற்காலிக கடவுச்சீட்டு தயார் » Sri Lanka Muslim

கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் இலங்கை வர தற்காலிக கடவுச்சீட்டு தயார்

passport

Contributors
author image

Editorial Team

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக தற்காலிக கடவுச்சீட்டு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தூதரகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பில் இலங்கையர்களிடம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka