கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரியால் நிர்ணயிப்பு..! - Sri Lanka Muslim

கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரியால் நிர்ணயிப்பு..!

Contributors
author image

Editorial Team

கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 

சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது..

இலங்கைக்கான கட்டார் தூதுவராலயமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்த முதலாவது மத்திய கிழக்கு நாடாக கட்டார் திகழ்கிறது. இந்த சம்பள முறைமை கட்டாரில் பணியாற்றும் சகல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் உரித்தாகும். நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பணியாற்றுபவர்களும் இந்த சம்பளக் கட்டமைப்பில் உள்வாங்கப்படுவார்கள்.

இதேவேளை, குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த வசதிகளை வழங்காதுவிடத்து, அதற்காக மேலதிக கொடுப்பனவுகளை ஒதுக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team