கட்டாரில் பயங்கர தொடா் மூடுபனி (photo) » Sri Lanka Muslim

கட்டாரில் பயங்கர தொடா் மூடுபனி (photo)

qa66

Contributors
author image

முஸாதிக் முஜீப்

கட்டாரில் பயங்கர தொடா் மூடுபனி. மூடுபனிக் காலநிலை ஒரு வாரம் வரை தொடரும் என அறிவிப்பு!

கட்டாரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கடுமையான மூடுபனி பொழிந்து வருகின்றது.

திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ஓட்ட சாரதிகள் சிரமப்படுவதையும், அனைத்து வாகனங்களும் விளக்குகளை எாிய வைத்த நிலையில் பயணித்ததையும் அவதாகிக்க முடிகின்றது.

கட்டாரின் முக்கிய நகரங்களாக டோஹா, ரய்யான், வக்ராஹ் மற்றும் அல்கோர் போன்ற பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாக கட்டாரி செய்தி இணையத்தளமான The Peninsula செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி தொடா்பனிமூட்டத்தினால் ஏனைய எந்த விதமான விபரீதங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாகவும் கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சாரதிகள் மிகவும் அதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்

qa qa-jpg2 qa-jpg2-jpg3 qa-jpg2-jpg3-jpg4

Web Design by The Design Lanka