கட்டார் இறக்காமம் அபிவிருத்தி சங்கம்; ஒன்றுகூடலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும். - Sri Lanka Muslim

கட்டார் இறக்காமம் அபிவிருத்தி சங்கம்; ஒன்றுகூடலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டாரின் சுதந்திரதினத்தை முன்னிட்டு, இறக்காமம் அபிவிருத்தி சங்கம் – கட்டார்  ஏற்பாட்டில் கட்டார் வாழ் இறக்காம மக்களுக்கிடையிலான சகோதரத்துவமும் ஒற்றுமையும் எனும் தொனிப்பொருளிலான குளிர்கால மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் ஒன்று கூடலும் எதிர்வரும் 17 ம் திகதி வியாழக்கிழமை அல் மகா கல்வி நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

இரண்டாவது முறையாக இம்மண்ணில் நடைபெறவுள்ள சுற்றுப்போட்டியில் 5 அணிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதானமாக இவ்வொன்று கூடலில் கல்வி மற்றும் ஏனைய துறைகள் தொடர்பில் இறக்காமத்தின் நிலை பற்றியும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் மதிய போசண உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறக்காம அபிவிருத்தி சங்கம் – கட்டார் அமைப்பானது இறக்காமாத்தின் பல்வேறு துறைகளில் தனது சேவையை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ir

Web Design by Srilanka Muslims Web Team