கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளை பகிஷ்கரிக்கக் கோரிக்கை! » Sri Lanka Muslim

கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளை பகிஷ்கரிக்கக் கோரிக்கை!

21s5

Contributors

கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை பகிஷ்கரிக்குமாறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெற்காசியாவைச் சேர்ந்த மனித உரிமைக் குழுக்களே இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் தெற்காசியாவைச் சேர்ந்த நிர்மாணத்துறை தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலையில் பணியாற்றுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை பகிஷ்கரிக்க வேண்டும் என புதுடில்லியை  தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் சுஹாஸ் சக்மா கோரியுள்ளார்.
ஏற்கனவே கோடைக்காலத்தில் கட்டாரில்  விளையாட முடியாது என பல நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்டச் சங்கங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka