கட்டார்: எழுச்சி மாநாடும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும். - Sri Lanka Muslim

கட்டார்: எழுச்சி மாநாடும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தகவல்: அபு உமைர் ஆல் சூரி


நவீன சவால்களுக்குள் சாகா வரம் பெற்றதைப் போல் சகதி வாழ்க்கைக்குள் சங்கைமிகு எதிர்காலத்தை தொலைத்து கரைசேர முடியா ஓடமாய் ஓலமிடும் இளம் சந்ததிகளை சலபுஸ்ஸாலிஹீன்களின் வாழ்க்கை வசந்தத்திற்குள் வரவழைக்கும் இந்நிகழ்ச்சிகள் SLDC எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.

அந்நிய கலாசார கழிவுகளுக்குள் புதையுண்டுவரும் நமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளை மீட்டெடுத்து நேரிய பாதையில் சரித்திரம் படைப்பதுதான் இஸ்லாத்தின் இலக்குகள்.

நீர்க்குமிழிக்குள் வீடு கட்டி வாழத்துடிக்கும் இலட்சியமில்லாத நம் சமுகத்தை நாளைய நித்திய உலகின் நிரந்தர சுகங்களுக்குள் இன்பம் காண்பதற்கு தடையாக தலைகாட்டும் சாத்தானிய வழிகளை மூடி நேரிய வழிகாட்டும் இந் நிகழ்ச்சியை தவறவிடவேண்டாம்.

உள்ளங்களை ஊடறுத்து உண்மைகளை தெளியவைக்க மாருதமாய் வரும் உரைகளின் தலைபு;புக்கள் இதோ!

01. அலைமோதும் நவீன சவால்களுக்குள் தத்தளிக்கும் இளம் தலைமுறை
02. சோதனைகளின் பிடிக்குள் விடுதலை தேடும் முஃமின்கள்
03. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு சமநிலைப் பார்வை
04. ஈமானிய பெண்ணின் இல்லற வாழ்க்கை

இத்தலைப்புகளில் பிரபல அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முஹம்மத் காஸிமி MA அவர்களின் சொற்பொழிவுகளால் உள்ளத்தை நிரப்பலாம்.

 2017 ஓக்டோபர் 19 ம் திகதிமுதல் ஒக்டோபர் 22 ம் திகதி வரை நிகழ்வுகள் நிஜமாகும்.
மேலதிக தகவல்களுக்கு SLDC யின் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள் www.sldcqatar.org

பெண்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு SLDC கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.

qa

Web Design by Srilanka Muslims Web Team