கட்டார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்! - Sri Lanka Muslim

கட்டார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்!

Contributors
author image

எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar

 

மத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.நாட்டு மக்களின் எண்ணிக்கையினை விட வேலைவாய்பினை பெற்றவர்களின் விகிதம் அதிகமாகும். உலகின் கேஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்நாடு 2030 ம் ஆண்டில் பல துறைகளிலும் அபிவிருத்தி,முன்னேற்றம் அடைவதர்காக திட்ட மிட்டு செயற்பட்டு வருகின்றது.

தனது நாட்டில் இதுவரை காலமும் பின்பற்றி வந்த சில தொழிற் சட்டங்களை தொழிலாளர்களின் நலன் கருதி கட்டார் அரசு மாற்றியமைத்து, விடயங்களை இலகு படுத்த திட்டமிட்டு வருகின்றது.

சாதாரண நிலையிலிரிந்து பல்கலைக் களகங்களின் பட்டதாரிகள் வரை தங்களது திறமைக்கேற்ப தொழில்களைப் பெற்று உயர் தரத்தில் சிறந்தும் விளங்குகின்றனர். கட்டார் சென்று தொழில் புரிய வேண்டும் என்பதர்காக குறிப்பிட்ட துறைகளில் தேர்சி பெற்று உரிய தொழிலைத் தேடிக் கொள்வதையும் நாம் இங்கு நோக்கலாம்.

இங்கு காணப்படும் தொழில்களில் “மந்தூப்” PRO (பொதுத் தொடர்பு அலுவலர்) பதவி முக்கியத்துவம் பெறுகின்றது. கம்பனி அல்லது அரச துறைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் இதன் சேவையினை வேண்டி நிற்பர்.

இலங்கை நாட்டவர்கள் கட்டாரில் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.தங்களது அன்றாட செய்திகளை அறிவது போல் கட்டாரின் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் உள்னர்.

சகலரும் தொடர்பு பட்ட பணியாக இது இருப்பதால் இங்கு வருபவர்களின் நன்மை கருதியும், அதனை ஒரு தொழிலாகப் பெறவேண்டும் என தொழிலைத் தேடுபவர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் சில தகவல்களைப் பரிமாறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இது “HR” துறையின் கீழ் உள்ள ஒரு தனிப் பிரிவாகும். கம்பனி அல்லது அரச துறை தனது அரச,தனியார்த் துறைகள் தொடர்புறும் செயற்பாடுகளை இவர்கள் மூலமே முன்னெடுக்கும்.

இவர்களது பணிகளை இரு வகையாக நோக்கலாம் ஒன்று: கம்பனிக்கும் அரச ,தனியார் காரியாலயங்கள்,அமைச்சுக் களுக்கிடையே உள்ள தொடர்புகளை மேற்கொள்ளல். இரண்டு: பணியாளர்களருடன் தொடர்புபட்ட மேற்படி காரியாலயங்களிலுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

கம்பனி அல்லது ஒரு நிறுவனம் கட்டாரில் அரச அங்கீகாரத்துடன் இயங்குவதற்கு பல அமைச்சு , திணைக்களங்களில் பதிவினைப் பெற்றிருத்தல் அவசியம். அப்பதிவுகளின்றி பல செயற்பாடுகளை அவர்களால் செய்ய முடியாமல் போய்விடும். சாதாரண பெட்டிக் கடை ஒன்றை நடாத்துவதென்றாலும் குறிப்பிட்ட பதிவுகளை மேற்கொண்டேயாக வேண்டும்.

கம்பனி அல்லது ஒரு நிறுவனம் ஒன்றிற்கான பதிவின் ஒழுங்கு விதிகளை பின்வருமாறு நோக்கலாம்.

ஆரம்பமாக உரிய தஸ்தாவோஜுகளுடன் தீயணைப்பு பிரிவில் பதிவினைப் பெற்று அர்களது அறிக்கையின் பிறகே மாநகர சபையில் பதிவினை மேற்கொள்ளல் வேண்டும்.அப்பதிவினை “municipality License” “தறாஹீஸ்” “பbலதிய்யா” என்று அழைக்கப்படும். அனைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சின் “Commercial Registration”, மற்றும் “Chamber Qatrar” மையத்தின் பதிவினையும் பெற்றுக் கொள்ளல்.இதனை முறையே “CR” “சிஜ்ல் திஜாரி”, “Chamber Qatrar” “குர்பது திஜாரா” என்று கூறப்படும். இப்பதிவுகளின் பிறகே கட்டார் உள்துறை அமைச்சின் கடவுச்சீட்டு “Passpoart” திணைக்களத்தின் பதிவினை மேற்கொள்ளலாம்.அப்பதிவே “Computer Card”, “கைது மன்ஷஆ” என்று பெயர் சொல்லப்படும்.

சில நிறுவனங்கள் பணிகளை முடிப்பதற்காக சகல பதிவுகளையும் வேண்டி நிற்கும். அதேவேளை பதிவுகளின் புதுப்பித்தலின் போது சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று தங்கியுள்ளதை அவதானிக்கலாம்.

உதாரணமாக “Computer Card”, காலாவதியாகிவிட்டால் “fire extinction license”, “municipality License” , “CR” ஆகிய மூன்று பதிவுகளும் புதுப்பிக்கப் பட்டிருத்தல் அவசியம்.அவை பூரணப் படுத்தப் படாவிட்டால் “Computer Card” இனை புதுப்பிக்க முடியாமல் போய்விடும்.

தொழில் அமைச்சிடம் விசா கோட்டாவினைப் பெறுதல்,வெளி நாடுகளிலிருந்து பணியாட்களை வரவழைத்தல், திருப்பியனுப்புதல், வங்கி நடவடிக்கை, வாகனங்களின் நிருவாக ஒழுங்கு போன்ற பல செயற்பாடுகளின் போது இதன் அவசியம் உணரப்படுகின்றது.
எடுத்துக் காட்டாக “Computer Card” இன் முக்கியத்துவத்தினை குறிப்பிட முடியும்.

இங்கு பணிபுரியும் ஒருவர் நாடு செல்ல வேண்டும் என்றிருந்தால் “Computer Card” புதுப்பிக்கப்பட்டிருத்தல் அசியம்.

அது காலாவதியாகிவிட்டால் முறையான ஒழுங்கு விதிகளுடன் புதுப்பிக்கப்படும் வரை காத்திருக்கத் தள்ளப்படுவார். இதனால் தான் நாட்டுக்கு போறது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது என்று பலர் பேசிக் கொள்வதை கட்டாரிலுள்ளவர்கள் அறிவர்.

மேலே கூறப்பட்டிருப்பது போன்று பல செயற்பாடுகளை கம்பனி சார்ந்து PRO கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதே நேரத்தில் பணியாளர்களருடன் தொடர்புபட்ட பொறுப்புக்களை பின்வருமாறு நோக்கலாம்.

ஒரு பணியாளரை வரவழைப்பதற்கான வீசா விண்ணப்பித்தது முதல் அவர் வந்த பிறகுள்ள பல விடயங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

வைத்திய பரிசோதனை,finger Print,ஒப்பந்தம் கைசாதிடப்பட்டு உறுதிப் படுத்தல், ஆள் அடையாள “QID”,வைத்திய “Medicale Card” அட்டைகளை பெற்றுக் கொடுத்தல், விடுமுறையில் செல்ல வேண்டி தேவை ஏற்பட்டால் அவருக்கான Ticket ,Exit or Cancel போன்ற பல வேலைகளை மேற்கொள்ளல் அவசியம்.

வைத்திய பரிசோதனை திருப்தி அளிக்காவிட்டால் உரிய பணியாளர் நாட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும்.அவரை இங்கு பணி செய்ய அரசு அனுமதிக்காது.

Passpoart office ,Medicle Commission ,CID Office, Poast Office ,Leber Department ,Foring Ministry, Justice Minisrty ,Embassyes, Ticketing Offices போன்ற பல திணக்களங்கள்,காரியாயங்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டி வரும்.

கம்பனிகளின் செயற்பாடுகளுக்கேற்ப PRO களின் எண்ணிக்கை வரையறுக் கப்பட்டிருக்கும். வெளிவிவகாரத்திற்கென்றும், காரியாலய செயற்பாடுகளுக்கென்றும் PROகளை நியமித்துக் கொள்வர். இருப்பினும் காரியாலயத்துடன் தொடர்பட்ட செயற்பாடுகளில் அவர்கள் அனுபவம் பெற்றிருப்பர்.

கட்டார் அரசாங்கம் தனது செயற்பாடுகளை நவீன தொழிநுட்பத்துடன் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அதன் அனைத்து காரியாலய சேவைகளும் Online மூலமாகவே மேற்கொள்ளப் படுகின்றது. இதனால் PRO கள் காரியாலயத்திலிருந்து விடயங்களை முடித்து விடுவர்.மேலதிக தேவையின் போது திணைக்களங்களுக்கும்,அமைச்சுகளுக்கும் செல்ல வேண்டி வரும்.

நிருவாக செயற்பாட்டின் இலகுத் தன்மையினை கருதி அரசாங்கம் 12 கடவுச்சீட்டு “Passpoart” காரியாலயங்களை மாவட்ட ரீதியாக திறந்துள்ளது.மேலும் பல அமைச்சுக்களை ஒன்றிணைத்து 5 க்கு மேற்பட்ட “Administrative Complexs” நிருாக வளாகங்களை அமைத்து நிருவாக சேவையினை துரிதப்படுத்த பல முன்னேற்றகரமான ஏற்பாடுகளை கட்டார் அரசு நடைமுறைப் படுத்துவது அச்செயற்பாடுகளுக்கு அது கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

அறபு மொழியாற்றல்,கனணி அறிவு,அதனைப் பயன்படுத்தி தரவுகளை கையாளும் விதம், ஆங்கிலத்தில் கருமமாற்றும் திறன்,தொடர்பாடல்த் தேர்சி ,காரியாலய முகாமை போன்ற திறங்களையும்,அனுபவங்களையும் இத்துறையில் ஈடுபடுபட ஆர்வம் உள்ளவர்கள் அடிப்படைத் தகைமைாக பெற்றிருத்தல் அவசியம்.

www.moi.gov.qa, www.mbt.gov.qa, www.molsa.gov.qa, www.qcc.org www.makemytrip.com போன்ற வெப்தளங்கள் PRO பணியினை நாடி வருபவர்களுக்கு துணைநிற்கும்.அறபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளங்கள் நிருவாகத்துடன் சார்ந்த பல செயற்பாடுகளுக்கு உதவியாக அமையும்.

எகிப்து,சூடான் போன்ற நாடுகளை சேர்ந்த பெரும் பாலானவர்களும், இந்தியா, இலங்கை நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட தொகையினரும் இத்துறையில் கருமமாற்றுகின்றனர். அறபு மொழியினை கற்ற எமது நாட்டவர்கள் அதிகம் இப்பிரிவில் ஈர்கப்பட்டு தொழிலைத் தேடுகின்றனர்.

இத்தொழிலுக்கான அடிப்படைத் தகைமைகளைப் பெற்றவர்கள் உரிய திறன்களை வளர்த்து, இப்பணியுடன் சம்பந்தப்பட்ட அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து அடிப்படையான விடயங்களை விளங்கி, குறிப்பிட்ட பயிற்சி,தேர்சிகளுடன் தொழிலைத் தேட முனையும் போது அவர்களுக்கு துணை நிற்கும்.

அதேவேளை கட்டாரில் பணிபுரியும் எமது நாட்டை சேர்ந்த சகோதர்களுக்கு இந்நாட்டுடன் தொடர்புபட்ட, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கும் இப்பணியின் சேவை பற்றிய தகவல்கள் உதவியாகவும் அமையலாம்.

Web Design by Srilanka Muslims Web Team