கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் » Sri Lanka Muslim

கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQவின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்

IFTHAR

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

 

கட்டார் பலாஹிகள் ஒன்றியம் IFQ வின் ரமழான் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 26-06-2015ம் திகதி ஜம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் MMM.உவைஷ் (பலாஹி) அவர்களின் தலைமையில் ரய்யான் ஷெய்ஹ் இப்ராஹீம் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பெரும்பாலான பலாஹிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். IFQ வின் வளர்ச்சி மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான பல முடிவுகள் எடுக்கப்பட்டன.நிருவாக கட்டமைப்பு,நிதியம் ஒன்றை உருவாக்கல் ,பெருநாள் ஒன்று கூடல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இறுதியாக IFQ வின் நிருவாக உருப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜவாஹிர் (மதனி )அவர்களின் நன்றியுரையின் பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்று மஃரிப் தொழுகையோடு அல்லாஹ்வின் உதவியினால் இனிதே நிறைவு பெற்றது.

தகவல்- செயலாளர் அஸ்பர் (பலாஹி) 0097430564040

Web Design by The Design Lanka