கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி - Sri Lanka Muslim
Contributors

 

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கட்டார் இல்-சல்வா வீதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (16/01/2014) மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை தாய்நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.(vk)

Web Design by Srilanka Muslims Web Team